இட்லி தோசை இல்லாத காலை உணவு சட்டுன்னு ஐந்தே நிமிடத்தில்

இட்லி தோசை இல்லாத காலை உணவு சட்டுன்னு ஐந்தே நிமிடத்தில்


தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 400 கிராம்
கோதுமை மாவு – அரை கப்
பொடிதாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
கொத்தமல்லி இலை – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
முட்டைக்கோஸ் மற்றும் கேரட் துருவல் – அரை கப்

முதலில் உருளைக்கிழங்கை சுத்தமாக அலசி அவற்றில் உள்ள தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக கட் செய்யவும்.

அதன் பிறகு மிக்சி ஜாரில் கட் செய்த இந்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைபோல் அரைத்து கொள்ளவும்.

அரைத்த இந்த உருளை கிழங்கை ஒரு சுத்தமான பவுலில் ஊற்றி அதனுடன் 1/2 கப் கோதுமை மாவு, வெங்காயம் ஒரு கப், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, துருகிய முட்டைக்கோஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக தோசை மாவு போல் கலந்து கொள்ளவும்.

அவ்வளவு தாங்க மாவு தயார்.

இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, கல் சூடேறியதும், எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை தோசை போல் ஊற்றி வேகவைக்கவும். கீழ் பகுதி நன்கு வெந்தவுடன், தோசையை பிரட்டி மறுபக்கத்தையும் வேகவைக்க வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான மற்றும் எளிமையான காலை உணவு தயார் அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Rates : 0