ஆரோக்கியமான கருப்பட்டி ராகி கூல் எப்படி செய்வது என்று பார்ப்போம்

ஆரோக்கியமான கருப்பட்டி ராகி கூல் எப்படி செய்வது என்று பார்ப்போம்


தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1/2 கப்
கொதிக்க வைத்த பால் – 1.5 கப்
கருப்பட்டி – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
பாதாம் – சிறிது (நறுக்கியது)
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்


செய்முறை

முதலில் ராகி கூல் செய்வதற்கு கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு அடுப்பில் இருந்து இறக்கி கருப்பட்டியை வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.

பிறகு மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாதவாறு கலந்து வைத்து கொள்ளவும்.

பின்பு அந்த கலவையை அடுப்பில் வைத்து தொடர்ந்து கரண்டியை கொண்டு கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

ராகி கலவையானது கொஞ்சம் கெட்டியானதும் அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி, கருப்பட்டி பாகு, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து கிளறினால் போதும், சுவையுள்ள மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி ராகி கூல் தயார்.