மென்மையான வடையை தயாரிப்பது எப்படி

கடைகளில் வடை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலேயே சுவையான, க்ரிஸ்பியான வடையை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

இந்திய உணவுகளில் பாரம்பரியமான உணவு தயிர் வடை.வீட்டிலேயே மொருமொருப்பான வடையை தயாரிக்கலாம்.மென்மையான வடையை தயாரிப்பது மிகவும் எளிமையானது.

இந்தியாவை பொருத்தமட்டில் தெரு ஓரக்கடைகளில் பஜ்ஜி, போண்டா, வடை போன்ற இந்திய உணவுகள் ருசியாகவும் உங்களை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டுபவையாகவும் இருக்கும். ஆனால் இந்த பலகாரங்கள் என்னதான் ருசியாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மற்ற உணவு பொருட்கள் எல்லாமே சுகாதாரமாக பயன்படுத்தப்படுவதில்லை.

இதன் காரணமாகவே உடலில் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. அது ஒருபுறம் இருக்க, சுவையான மற்றும் மிருதுவான வடையை எப்படி நம்மால் சாப்பிடாமல் இருக்க முடியும்? வெங்காயம், கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், ஆகியவை சேர்த்து செய்யப்படும் வடையை புதினா சட்னி அல்லது க்ரீமியான தயிரில் சேர்த்து சாப்பிடலாம். கடைகளில் வடை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலேயே சுவையான, க்ரிஸ்பியான வடையை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

· ஒரு பாத்திரத்தில் உளுந்து சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து 4-5 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனை அரைத்து கொள்ளவும்.

· அத்துடன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். உளுந்து மாவில் பேக்கிங் சோடா சேர்ப்பதால் நன்கு உப்பி வரும்.

· பேக்கிங் சோடா சேர்த்து கலந்த மாவை சில நிமிடங்கள் நன்கு கலந்து கொள்ளவும். நன்கு கலக்கும்போதுதான் வடையின் தன்மை மிருதுவாக இருக்கும்.

· கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்க வேண்டும். பின் வடையை ஒரு வடிவமாக தட்டி பதமாக எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

· ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். பொரித்தெடுத்த வடையை இந்த குளிர்ந்த நீரில் போட்டு சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.

· பின் அந்த நீரில் இருந்து வடையை அப்படியே வெளியே எடுத்து வைக்கவும். அதில் இருக்கக்கூடிய தண்ணீர் வடையை மிகவும் மென்மையாக வைத்திருக்கும்.

· இதனை தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.