முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியே பிரித்தெடுப்பது எப்படி

முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் பகுதியை பிரித்தெடுப்பது மிகவும் சுலபமானது
முட்டையின் வெள்ளை பகுதியில் கலோரிகள் மிகவும் குறைவு.முட்டையின் மஞ்சள் பகுதியில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கிறது.எளிமையான முறையில் முட்டையின் மஞ்சள் பகுதியை பிரித்தெடுக்கலாம்.

சில ரெசிபிகளை தயாரிக்கும்போது, முட்டையின் மஞ்சள் பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுக்க வேண்டியிருக்கும். அது சற்றே சவாலான விஷயம் தான். ஆனால் அதன் லாவகம் தெரிந்துவிட்டால், மிகவும் எளிமையாக செய்யலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்து சமைத்து சாப்பிடுவார்கள். இதில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க இதனை மட்டும் சாப்பிடலாம்.

அதுபோக, மக்ரூன் தயாரிப்பதற்கு முட்டையின் வெள்ளை பகுதியே தேவை. ஆனால் பாஸ்தா மற்றும் புட்டிங் தயாரிப்பதற்கு முட்டையின் மஞ்சள் பகுதியே தேவை. முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளை பகுதியை தனித்தனியே பிரித்தெடுக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஒரு பௌலில் முட்டையை லாவகமாக உடைத்து ஊற்றி கொள்ளவும். மஞ்சள் கரு உடையாதவாறு பதமாக உடைக்க வேண்டும்.

பின் ஒரு காலி வாட்டர் பாட்டிலை கொண்டு முட்டையின் மஞ்சள் பகுதியை மட்டும் தனியே பிரித்து எடுத்து மற்றொரு பௌலில் ஊற்றலாம். அல்லது முட்டையை பாதியாக உடைத்து, வெள்ளை பகுதியை ஒரு பௌலில் ஊற்றவும். முட்டையின் ஓட்டில் மஞ்சள் பகுதியை மாற்றி விட்டு பின் மீதமுள்ள வெள்ளை பகுதியையும் ஊற்றி பிரித்தெடுக்கலாம்.

Rates : 0