பஞ்சாபி சிக்கன் மசாலா எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

சிக்கன் – 1கிலோ
பெரிய வெங்காயம் – 3 (இரண்டை நறுக்கி கொள்ளவும்)
பூண்டு – 10 பல்
மிளகாய்தூள் – 3 டீஸ்பூன்
தனியா தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
தக்காளி – 2 (விழுது)
இஞ்சி – சிறுதுண்டு ( பொடியாக நறுக்கவும்)
ஏலக்காய் – 6
கிராம்பு – 6
டால்டா – 1/2 கப்


செய்முறை:

பூண்டை விழுதாக அரைத்து தயிருடன் கலக்கவும். தேங்காய், முந்திரிப்பருப்பை விழுதாக அரைக்கவும். ஒரு பெரிய வெங்காயம், சீரகம், மிளகாய்த்தூள், தனியாதூள் இவற்றை விழுதாக்கிக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் டால்டாவை ஊற்றி, உருகத் தொடங்கியதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நிறமாறத் தொடங்கியதும், ஏலக்காய்,கிராம்பு மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரைவதக்கவும்.

இப்பொழுது நறுக்கிய இஞ்சி, மஞ்சள்தூள், அரைத்த வெங்காயம், மசாலா விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தயிரை இத்துடன் சேர்த்து, எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். இத்துடன் தக்காளி விழுது, சிக்கன் துண்டுகள், முந்திரி, தேங்காய் விழுதைச் சேர்த்து ஃப்ரை செய்யவும். இத்துடன் 1/2 கப் நீர் ஊற்றி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைந்த தீயில் வைத்து மூடி வைக்கவும்.

சிக்கன் துண்டுகள் நன்கு வெந்து, க்ரேவியுடன் சேர்த்து கெட்டியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்