நீரிழிவு நோயாளிகள் செர்ரி பழம் சாப்பிடலாமா

கடைகளில் கிடைக்கக்கூடிய ஃப்ளேவர் சேர்த்த யோகர்ட்டை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
செர்ரியில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.செரிமான பிரச்சனைகளுக்கும் நீரிழிவு நோய்க்கும் சிறந்தது.யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

செர்ரி பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது. இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் வலி குணமாவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செர்ரியில் மெலடோனின் இருப்பதால் தூக்கம் சீராக இருக்கும். செர்ரியில் இருக்கக்கூடிய ஆண்டிஆக்ஸிடண்ட் அந்தோசையனின் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். செர்ரியில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு குறைவாகவும் இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய இயற்கை சர்க்கரை உடலில் மெட்டபாலிசத்தை சீராக இயக்குகிறது.

ஸ்மூத்தி:
யோகர்ட், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, சியா விதைகள் மற்றும் பாதாம் சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம். இதில் தேன் அல்லது சர்க்கரை சேர்க்க தேவையில்லை. இதனை குடித்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

சாலட்:
செர்ரி, கீரை, ஃபெட்டா மற்றும் உங்களுக்கு பிடித்தமான விதைகல் சேர்த்து ஸ்மூத்தி செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடியது.

செரல்ஸ்:
காலை நேரத்தில் செரல்ஸ் சாப்பிட்டு சலித்து விட்டதா? அத்துடன் செர்ரி, நட்ஸ் சேர்த்து கொண்டால் இன்னும் ருசியாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

யோகர்ட்:
யோகர்ட்டுடன் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். கடைகளில் கிடைக்கக்கூடிய ஃப்ளேவர் சேர்த்த யோகர்ட்டை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். யோகர்ட்டில் செர்ரி சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

Rates : 0