ட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான அல்வா ரெசிபிகள்

மகிழ்ச்சியான தருணங்களை இனிப்பு வழங்கி மற்றும் சாப்பிட்டு கொண்டாடுவதை உலக பண்பாக வைத்துள்ளனர்.
உலகம் முழுக்க விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் அல்வாவும் ஒன்று.அல்வாவை ருசிக்காக மட்டுமின்றி ஆரோக்கியத்திற்காகவும் செய்யலாம்.அல்வாவில் விதைகள், பழங்கள் மற்றும் கொட்டைகள் சேர்த்து சாப்பிடலாம்.
கோதுமை, சேமியா போன்றவற்றுடன் மற்ற பொருட்கள் சேர்த்து அல்வா செய்யப்படுவது வழக்கம் தான். மகிழ்ச்சியான தருணங்களை இனிப்பு வழங்கி மற்றும் சாப்பிட்டு கொண்டாடுவதை உலக பண்பாக வைத்துள்ளனர். சற்றே மாறுபட்ட ருசியில் அல்வா எப்படி செய்யலாம் என்பது குறித்து தான் இந்த கட்டுரை.

கசகசா அல்வா:
கசகசா, தாமரை விதை, பாதாம், பிஸ்தா, நெய் மற்றும் பால் ஆகியவை சேர்த்து இந்த அல்வாவை தயார் செய்யலாம். கசகசா செரிமானம் பிரச்சனைகளை சரிசெய்யும். மேலும் மலட்டுத்தன்மையை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சுரக்காய் அல்வா:
சுரக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கிறது. சுரக்காய், வெல்லம் ஆகியவை சேர்த்து அல்வா செய்து சாப்பிடலாம். ருசியுடன் ஆரோக்கியமும் நிறைந்த இனிப்பு வகை இது.

பூசணிக்காய் மற்றும் ஆப்பிள் அல்வா:
பூசணிக்காய் மற்றும் ஆப்பிள் இரண்டையும் நன்கு மசித்து அத்துடன் நெய் மற்றும் சில வாசனை பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த அல்வா தனித்துவமான சுவையில் இருக்கும்.

வால்நட் அல்வா:
வால்நட்டில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது. இது இருதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. வால்நட் மற்றும் வெள்ளரி விதை சேர்த்து அல்வா செய்து சாப்பிடலாம்.

செஸ்ட்நட் அல்வா:
இந்த செஸ்ட்நட் ஒரு க்ளூட்டன் ஃப்ரீ மாவுகளில் ஒன்று. இதன் சுவை அலாதியானது. இதில் அல்வா செய்து சாப்பிடுவது புதுமையான ருசியுடன் இருக்கும்.