சிக்கன் லாலிபாப் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

சிக்கன் லெக் பீஸ் – 6
ரெட்கலர் -1 சிட்டிகை
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க
புதினா,கொத்தமல்லி -சிறிது
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – 1ஸ்பூன்
தயிர் – 1 ஸ்பூன்
மைதா மாவு – 1 ஸ்பூன்
சோளமாவு – 1 ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு -1


செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து நடுவில் அங்கங்கே கீறிக்கொள்ளவும். பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், ரெட்கலர், இஞ்சி பூண்டு விழுது,தயிர், சிறிது உப்பு அனைத்தையும் கலந்து வைக்கவும்.

குக்கரில் சிக்கனை தண்ணீர் ஊற்றாமல் 3 விசில் வரை வேகவிடவும்.சிக்கனில் தண்ணீர் விடும்,அதனால் தண்ணீர் ஊற்ற வேண்டாம். ப்ரெஷ்ர் அடங்கியதும் திறந்துப் பார்த்தால் கறி வெந்து தண்ணீர் விட்டிருக்கும்.

சிக்கனை மட்டும் தனியா எடுத்து அதில் மைதாமாவு, சோளமாவு, முட்டை வெள்ளைகரு, தேவைப்பட்டால் சிறிது உப்பு கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

பிசையும் போது தண்ணீர் தேவையெனில் சிக்கன் வெந்த தண்ணீர் ஊற்றி பிசையவும். பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.