சாட் உணவுகளுக்கு ஏற்ற சுவையான சட்னி ரெசிபி

உங்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் ரெசிபிகளுடன் இந்த சட்னி ரெசிபிகளையும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். இவற்றை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

இந்த இனிப்பு சட்னி உங்கள் உணவை மேலும் சுவையாக்கும்.இனிப்பு மற்றும் புளிப்பு சுவை இரண்டுமே நாவூற செய்யும்.இவற்றை விட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

மாலை நேரத்தில் ஏற்படும் பசியின் போது சூடாக பஜ்ஜி, சமோசா, பாவ் பாஜி, பாணி பூரி, முறுக்கு, மிக்ஸர், பக்கோடா போன்றவற்றை சாப்பிடும் பழக்கம் நமக்கு இருக்கும். அதனை இன்னும் ருசியாக்க கூடவே காரச்சட்னி, புளிச்சட்னி, தேங்காய் சட்னி போன்றவற்றை சேர்த்து கொள்வோம். தற்போது நம்மில் பெரும்பாலானோர் சாட் உணவுகளையே பெரிதும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் அதற்கு ஏற்ற ருசியான சட்னி ரெசிபிகள் என்னென்ன என்று இப்போது பார்ப்போம்.

பேரிச்சை:

பழங்களிலேயே அதிகபடியான இனிப்பு சுவை கொண்ட பழம் பேரிச்சம் பழம். பேரிச்சையை அரைத்தால் தேன் போன்ற சுவையில் அதன் தன்மை மிகவும் மிருதுவாக இருக்கும். பேரிச்சை, மிளகாய் ஆகியவை சேர்த்து காரமும் இனிப்பும் கலந்த சுவையில் சட்னி தயாரிக்கலாம்.

மாம்பழம்:

மில்க்‌ஷேக் தொடங்கி ஐஸ்கிரீம் வரை எல்லாவற்றிலும் மாம்பழம் சேர்க்கப்படுகிறது. மாம்பழத்துடன், மிளகு, பட்டை இலை, பெருங்காயம் மற்றும் கிராம்பு சேர்த்து செய்யப்படும் இந்த சட்னி மிகவும் ருசியாக இருக்கும்.

இஞ்சி புளி:

புளி, வெல்லம், இஞ்சி சேர்த்து செய்யப்படும் இந்த சட்னி நாவூறும் வகையில் இருக்கும். இதன் சுவையும், மணமும் உங்களை மேலும் சாப்பிட தூண்டும்.

வெல்லம்:

இந்த சட்னியில் வெல்லம் மற்றும் புளி சேர்க்கப்படுகிறது. இதனை பூரி, பட்டூரா மற்றும் உங்களுக்கு பிடித்த சாட் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த சட்னிகள் உங்கள் நாவின் சுவை அரும்புகளை மலர செய்யும். உங்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் ரெசிபிகளுடன் இந்த சட்னி ரெசிபிகளையும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். இவற்றை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

Rates : 0