எண்ணெய் சரும பாதிப்பா நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்

எண்ணெய் சரும பாதிப்பா நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்

ஹார்மோன் மாற்றங்களினால் எண்ணெய் சருமம் ஏற்படும்அரைக்கப்பட்ட வெள்ளரியை பூசி கொண்டால், சருமத்தில் எண்ணெய் தன்மை நீங்கும்உடலுக்கு தேவையான தண்ணீர் எடுத்து கொள்ளவில்லை என்றால் சருமம் பாதிக்கும்

சரும பிரச்சனைகளில் பொதுவான ஒன்று, எண்ணெய் சருமத்தை கட்டுப்படுத்துவது. உடலில் ஏற்படும் மாற்றங்களினால், உணவு பழக்க வழக்கங்களினால் எண்ணெய் சருமம் ஏற்படுகின்றன. இதனால், முகப்பரு போன்ற சரும பாதிப்புகள் உண்டாகின்றன. சரியான உணவு, உடற் பயிற்சி, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களினால் இந்த பிரச்சனையை தீர்க்கலாம்

எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கான சில காரணங்கள்:

மரபியல்: தலைமுறைகளாக, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எண்ணெய் தன்மை கொண்ட சருமம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது

வயது: உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால், முகப்பரு போன்ற பிரச்சனைகள் கொண்ட எண்ணெய் சருமம் ஏற்படும்

மாதவிடாய்: பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நேரங்களில், எண்ணெய் சரும பிரச்சனைகள் வரும்

வியர்வை: அதிக அளவு உடல் வியர்வை வெளியேறுவதனால், எண்ணெய் சருமம் உண்டாகும்

பிறப்பு கட்டுப்பாடு: பெண்கள் எடுத்து கொள்ளும் குழந்தை தடுப்பு மருந்துகளினாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்

வாழ்க்கை முறை: ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி இல்லையெனில், எண்ணெய் சரும பாதிப்புகள் வரும்

தண்ணீர்: உடலுக்கு தேவையான தண்ணீர் எடுத்து கொள்ளவில்லை என்றால், சரும பாதிபுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன

ஆரோக்கியமான சருமத்திற்கு, உணவு கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, எண்ணெய் சரும பாதிப்புகள் உள்ளவர்கள் சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும். தவிர்க்க வேண்டிய/ சாப்பிட கூடிய உணவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

வறுத்த உணவுகள்

சமோசா, ப்ரெஞ்சு ப்ரைஸ் போன்ற உணவுகளை மழை காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வறுக்கப்பட்ட உணவுகளினால், சரும பாதிப்புகள் அதிகம் இருக்கும்

பேக்கரி பொருட்கள்

பிரெட், கேக், குக்கீஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளினால், சருமத்திற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த உணவு பொருட்கள் தயாரிக்கும் போது, நார்ச்சத்துகள் குறைந்துவிடுகின்றன.

இனிப்புகள்

ஜிலேபி, பால் சாக்குலேட்ஸ், ஐஸ்கிரீம், கேக் ஆகியவற்றை மழை காலத்தின் போது தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக, வெல்லம், கருப்பட்டி, தேன் போன்றவற்றை சேர்த்து சாப்பிடவும். இயற்கையாக கிடைக்க கூடிய ப்ரெஷ் ஜூஸ், தேங்காய் நீர், மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய பானங்களை குடிக்க வேண்டும்

பால் பொருட்கள்

வெண்ணெய், க்ரீம், சீஸ், நெய் போன்ற உணவு பொருட்களில் உள்ள கொழுப்பு, உடல் சருமத்திற்கு பாதிப்பு அளிக்க கூடியது. எனவே, கட்டுப்பாடான அளவில் பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்

பதப்படுத்தப்பட்ட உணவு

சாசேஜ், பெகான் போன்ற உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். முகப்பரு ஏற்படுவதற்கு இவை காரணமாக அமைகின்றன. குறிப்பாக, பாக் செய்யப்பட்ட உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்

தண்ணீர்

தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதனால், ஆரோக்கியமான சருமத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

பச்சை காய்கறிகள்/பழங்கள்

வெள்ளரி, தர்பூசணி, ப்ளம்ஸ் போன்ற பச்சை பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களில் உள்ள சிட்ரஸ் உடல் சருமத்திற்கு ஆரோக்கியமானது

ப்ளம்ஸ்

எண்ணெய் சருமம் கொண்டுள்ளவர்கள், ப்ளம்ஸ் பழத்தை முகத்தில் தேய்த்து வந்தால், எண்ணெய் தன்மை குறையும்.

வெள்ளரி

அரைக்கப்பட்ட வெள்ளரியை, முகத்தில் பூசி கொண்டால், சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மை நீங்கும். பளபளப்பான சருமம் ஏற்படும்

புதினா

2 ஸ்பூன் ரெட் மசூர், 2 ஸ்பூன் புதினா ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல கலக்கி வைத்து கொள்ளவும். முகத்தில் தேய்த்து, சுத்தமான நீரில் முகம் கழுவினால், முக சருமம் ஆரோக்கியமாக மாறும்