உணவு & பானம் கோடைக்கேற்ற ஹெல்தி வெஜி பாப்

கோடைக்கேற்ற ஹெல்தி “வெஜி பாப்”!!கோடைக்காலம் என்பதால் வெள்ளரி, எலுமிச்சை மற்றும் புதினா சேர்த்து பாப்ஸிகில் தயாரிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தந்து புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள நிறைய வழிகள் உண்டு.கோடைக்காலத்தில் கட்டாயமாக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.

உங்கள் டயட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களை நிறைய சேர்த்து கொண்டால் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழலாம். இவற்றில் நுண்ணூட்ட சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவை உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்க உதவும்.

காய்கறிகளிலும் பழங்களிலும் வைட்டமின் மற்றும் மினரல் இருப்பதால் சாலட்டாகவோ, பழச்சாறாகவோ, ஸ்மூத்தியாகவோ, ஐஸ்கிரீமாகவோ பருகலாம். ஆனால் காய்கறிகள் மற்றும் பழங்களில் எப்படி இனிப்புகள் மற்றும் ஐஸ்கிரீம்களை செய்ய முடியும் என்பது தானே உங்கள் கேள்வி. அந்த கேள்விக்கு பதிலாகத்தான் இந்த ஹெல்தி ரெசிபிகளை நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் பாப்ஸிகில்: ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றை அரைத்து அதனை பாப்ஸிகில் மோல்டில் ஊற்றி வைக்கவும். அத்துடன் இனிப்பு சுவைக்காக ஆர்கானிக் தேன் சேர்த்து கொள்ளலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் இதேபோன்று நீங்கள் விரும்பும் காய்கறிகளை கொண்டும் தயாரிக்கலாம்.

வெள்ளரி, எலுமிச்சை மற்றும் புதினா பாப்ஸிகில்:

கோடைக்காலம் என்பதால் வெள்ளரி, எலுமிச்சை மற்றும் புதினா சேர்த்து பாப்ஸிகில் தயாரிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தந்து புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

தக்காளி, கேரட் மற்றும் எலுமிச்சை பாப்ஸிகில்:

தக்காளி, கேரட், எலுமிச்சை, உப்பு மற்றும் மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பாப்ஸிகில் உங்கள் நாவின் ருசியை தூண்டக்கூடியதாக இருக்கும். கோடைக் காலத்திற்கு ஏற்றது.

கீரை ஸ்மூத்தி:

கீரையை கொண்டு ஸ்மூத்தி பாப்ஸிகில் மோல்டில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். இது உங்கள் காலை உணவாக இருந்தால் இன்னும் சிறப்பு.