ஈஸி மட்டன் சாப்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்

ஈஸி மட்டன் சாப்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்


தேவையான பொருட்கள்:

மட்டன் – அரைக் கிலோ
பச்சைமிளகாய் விழுது – 1 ஸ்பூன்
தனியா தூள் -2 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1 கப்
உப்பு – தேவைக்கு
பட்டை – ஒரு துண்டு
சோம்பு – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் -1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
மல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

மட்டனை நன்கு சுத்தமாக கழுவி அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தனியாதூள் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

குக்கரில் ஊறிய மட்டன் கலவையை போட்டு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசைந்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளி்த்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன்

தாளித்தவற்றுடன் வேக வைத்த மட்டனை சேர்த்து பிரட்டி விட்டு நன்கு சிவக்க வந்ததும் எடுக்கவும். சுவையான மட்டன் சாப்ஸ் ரெடி.