இரத்த அழுத்தத்தை நிமிடங்களில் சீராக்கும் பழச்சாறுகள்

உயர் இரத்த அழுத்தம் நாட்பட்டு இருக்குமானால் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.ஆரஞ்சு பழச்சாற்றை தினமும் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தவறான உணவுப்பழக்கம், ஓய்வின்றி பல மணி நேரங்கள் வேலை செய்வது, மன அழுத்தம் போன்றவற்றால் உடலில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வாழ்வியல் பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இருதய நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இரத்த அழுத்தத்தை எப்போதும் சீராக வைத்து கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சம அளவு எடுத்து கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தை சீராக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மேலும் சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளுடன் சாலட், பழச்சாறுகள் போன்றவற்றை சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் சீராகும். இரத்த அழுத்தத்தை சில நிமிடங்களில் சீராக்கும் சில பழச்சாறுகளை பார்ப்போம்.

மாதுளை:

மாதுளை பழத்தில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இரத்த நாளங்களை இறுக செய்யும் என்சைம்களின் சுரப்பை தடுத்து உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

கிரான்பெர்ரி:

க்ரான்பெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறைக்க இதனை சாப்பிடலாம். இதில் கலோரிகள் குறைவு என்பதால் இரத்த நாளங்களை சரிவர இயங்க செய்து, இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட், பையோஃப்ளேவனாய்டு இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து, உடலில் மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகிறது. மேலும் இருதய ஆரோக்கியமாக இருக்க தினசரி ஆரஞ்சு பழச்சாறு குடித்து வரலாம்.

இந்த பழச்சாறுகள் எல்லாம் ஊட்டச்சத்துக்கள் மிகுந்தது மட்டுமல்ல. உயர் இரத்த அழுத்தத்தையும் சீராக்கி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் சம அளவு எடுத்து கொள்வது நல்லது. உயர் இரத்த அழுத்தம் நாட்பட்டு இருக்குமானால் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.