வெள்ளரிக்காய் தக்காளி சாலட் வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – 1
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1
மிளகு தூள் – 1 ஸ்பூன்
நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை

வெள்ளரிக்காய் , வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு நறுக்கிய அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் தேவைாயன அளவு உப்பு மிளகு தூள் சேர்த்து மல்லிதழை தூவி நன்கு கிளரினால் சூப்பரான வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட் ரெடி