வெந்தயக் குழம்பு வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

வெந்தயம் – 2 ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் – 5 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 20
காய்ந்த மிளகாய் – 5
மல்லி தூள் – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு – 8 பற்கள்
கடுகு – அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்
உப்பு – தேவைாயன அளவு
நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை

வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
மிளகாய், சீரகம், மல்லிதுள் தேங்காய் துருவல் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பூண்டை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

அதில் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு நறுக்கின வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மசாலாசேர்த்து வதங்கியதும்
புளியை கரைத்து மசாலா கலவையில் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கி வைக்கவும்.
சுவையான வெந்தயக் குழம்பு ரெடி