வெண்டைக்காய் புளி பச்சடி வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் -கால் கிலோ
நறுக்கின வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 2
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய் – 5 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு


செய்முறை

வெண்டைக்காய் மெலிதாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் , சீரகம், சாம்பார் வெங்காயம் ,சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கி சிறிதளவு உப்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் புளி தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பிறகு மூடியைத் திறந்து அரைத்த மசாலா சேர்த்து மசாலா வாசனை போனவுன் இறக்கவும்.

சுவையான வெண்டைக்காய் புளி பச்சடி ரெடி