வெஜிடபிள் கோலா உருண்டை வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
கோஸ் – 100 கிராம்
உருளைக்கிழங்கு -100 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 1
மிளகாய்தூள் – கால் ஸ்பூன்
பட்டை, லவங்கம், மிளகுத்தூள் – சிறிதளவு
பொட்டுக்கடலை மாவு – 6 ஸ்பூன்
முந்திரி – 3
உப்பு – தேவையான அளவு
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு


செய்முறை

காய்கறிகளை ஆவியில் வேக வைக்கவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வெங்காயம், பச்சைமிளகாய், மிளகுத் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொட்டுக்கடலை மாவு, முந்திரியை தூளாக்கி சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்