வியக்கும் நற்குணங்களைக் கொண்ட விளக்கெண்ணெய்

மலக்குடலின் இயக்கத்தை மேம் படுத்தி மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கிறது. பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இதை மலச்சிக்கலுக்கு என்று இல்லாமல் குடலை தூய்மைப்படுத்த உபயோகித்தார்கள். சில நேரங்களில் இந்த எண்ணெயின் பிசுபிசுப்பும் வாசமும் ஒவ்வாமையை ஏற்படுத்தினாலும் இது வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடாது.

மந்தமாக இருப்பவர்களைப் பார்த்தால் கிராமத்தில் வேடிக்கையாக விளக்கெண்ணெய் மாதிரி இருக்காதே என்று சொல்வார்கள். ஆனால் விளக்கெண்ணெயின் பயன்கள் தெரிந்து கொண்டால் யாரையும் மறந்து கூட அப்படி சொல்ல மாட்டீர்கள்.

விளக்கெண்ணெயைப் பற்றி தெரிந்துகொள்வற்கு முன்பு எண்ணெய் வகைகளைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் பழங்காலத்தில் புழக்கத்திலிருந்த எண்ணெய் வகைகள் என்ன என்று பார்த்தால் எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண் ணெய், நிலக்கடலையிலிருந்து பெறப்படும் கடலை எண்ணெய், ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் விளக் கெண்ணெய், கடுகு எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைதான் பிரதானமாக இருந்தது.

பிறகு உணவிலும் நுழைந்த நவீன ஆதிக்கத்தால் மக்கள் இந்த எண்ணெயிலிருந்து படிப்படியாக ரீபைண்டு ஆயில் (சூரி யகாந்தி) எண்ணெய்க்கு மாறினார்கள். தற்போது நல்ல கொழுப்புகளை நமது பாரம்பரிய எண்ணெய் தான் உருவாக்கு கிறது என்ற விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.

விளக்கெண்ணெய்:

தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்கள் சத்துக்கள் மிகுந்தவை என்று சொல்லப்படுகிறது. அப்படியான சத்துக்கள் நிறைந்த மருத்துவ குணமுள்ள எண்ணெய்தான் ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்.

எண்ணெய்கள் பொதுவாக அடர்த்தி குறைந்து காணப்படும். ஆனால் விளக்கெண்ணெய் அடர்த்தியாக இருப்பதோடு ஒரு வித பிசுபிசுப்பையும் கொண்டிருக்கும். இதன் விதைகள் நச்சுத்தன்மையைக் கொண்டிருந்தாலும் இதிலிருந்து பெறப் படும் எண்ணெயில் நச்சுத்தன்மை இருப் பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றுவிதமான விளக்கெண்ணெய் கடைகளில் கிடைக்கிறது. ஒன்று ஆமணக்கு செடியிலிருந்து பெறப்படும் எண்ணெய். இது ஆர்கானிக் விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருக்கும் வேதிப்பொருள்களை நீக்கி பயன்படுத்தி னால் மேலும் நன்மைகள் உண்டாகும். இந்த எண்ணெய் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

கருப்பு ஆமணக்கு எண்ணெய் என்பது விதைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் எடுக்காமல் வறுத்து அதன் பிறகு எண் ணெய் எடுப்பது. இது பார்க்க கறுப்பாக புகை வாசனையோடு இருந்தாலும் சருமத்தை அழகாக வைத்திருக்கவும் முகப் பருக்கள், வடுக்களை நீக்கவும் உதவுகிறது.

ஹைட்ரஜன் சேர்த்து உருவாக்கப்படும் இந்த விளக்கெண்ணெய் ஹைட்ரோஜெனரேட்டட் விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையாது என்பதோடு அதிக கடினத்தன்மையும் கொண்டிருக்கும். இவற்றை அழகு சாதன பொருள்களில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

சிறந்த மலமிளக்கி:

விளக்கெண்ணெய் மலமிளக்கியைத் தூண்டும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மலக்குடலின் இயக்கத்தை மேம் படுத்தி மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கிறது. பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இதை மலச்சிக்க லுக்கு என்று இல்லாமல் குடலை தூய்மைப்படுத்த உபயோகித்தார்கள்.

சிறு வயது குழந்தைகளாக இருந்தாலும் காலையில் வெறும் வயிற்றில் கால் தம்ளர் மிதமான வெந்நீரில் 5 முதல் 10 சொட்டு கள் வரை (வயதுக் கேற்ப) விட்டு கலந்து குடிக்க வைத்தால் அடுத்த சில மணிநேரத்தில் குடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும். பெரியவர்களும் விளக்கெண்ணெய் சிகிச்சையின் மூலம் குடலை சுத்தம் செய்து கொண்டார்கள்.

முன்னோர்கள் இரவு நேரம் வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் தோய்த்து சாப்பிட்டார்கள். மருந்து குழம்பு வைக்கும் போது தாளிப்பில் விளக்கெண்ணெய் பயன்படுத்தினார்கள். விளக்கெண்ணெய் அதிக குளிர்ச்சித்தரக்கூடியது என்பதால் அடிக்கடி எடுக்காமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது பருவ காலத்துக் கேற்ப ஆறுமாதங்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது ஆரோக்யம் காப்பதோடு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

குழந்தைகளுக்கு சூட் டினால் உண்டாகும் வயிற்றுவலியைத் தணிப்பதிலும் விளக்கெண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தையின் தொப்புள், உள்ளங்கால் பகுதியில் இலேசாக ஒரு சொட்டு தடவினால் உஷ்ணம் குறைந்து மலக்கட்டு இருந் தாலும் வெளியேறும். சில நேரங்களில் இந்த எண்ணெயின் பிசுபிசுப்பும் வாசமும் ஒவ்வாமையை ஏற்படுத்தினாலும் இது வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடாது.

மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும் விளக்கெண்ணெய்

மூட்டுவலிக்கு முக்கியமானது:

சர்வ சாதாரணமான அனைவரிடமும் புழங்கும் நோய் எது என்று கேட்டால் மூட்டுவலி என்ற பதிலே முதன்மையானதாக இருக்கும். அத்தகைய மூட்டுவலியின் தீவிரத்தைக் குறைக்க விளக்கெண்ணெய் பயன்படுகிறது. எண்ணெய் குளியல் இல் லாத இக்காலத்தில் மூட்டுகளில் இயல்பாக வலி உண்டாகிறது.

இரவு படுக்கும் முன்பு சில துளி விளக்கெண்ணெயை இலேசாக சூடுபடுத்தி மூட்டு இருக்கும் பகுதிகளில் மசாஜ் போன்று தேய்த்து வந்தால் சரும துவாரங்களின் வழியாக எண்ணெய் உட்புகுந்து மூட்டுகளின் உராய்வைத் தடுப்பதோடு வலியை யும் குறைக்கிறது. விளக்கெண்ணெய் ஆஸ்டியோ ஆரித்ரிடிஸ் பிரச்னைகள் இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந் தால் அதை விளக்கெண்ணெய் குணப்படுத்துகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் தீவிர மூட்டுவலியையும் குறைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது விளக்கெண்ணெய்.

கூந்தல் வளர்ச்சியிலும் விளக்கெண்ணெய்:

பாவற்காய் கசப்பு ஆனால் உடல் ஆரோக்யத்துக்கு இனிப்பு ஆயிற்றே அது போல விளக்கெண்ணெயிலிருந்து வெளிவரும் வாடை பேன்களுக்கு ஒவ்வாமையைத் தருவதால் பேன்கள் நிரந்தரமாக ஒழியும் என்று சொல்லலாம். பேன், பொடுகு அதி கம் இருப்பவர்கள் தலையில் விளக்கெண்ணெயைத் தேய்த்து கால் மணிநேரம் ஊறவைத்து பிறகு சாதம் வடித்த கஞ்சியில் சீயக்காய்த் தூள் சேர்த்து தலைக்கு குளித்தால் இரண்டு குளியலில் பேனைத் தேடி பார்க்கலாம். சில நாட்கள் விளக்கெண் ணெய் வாடை மட்டும் நீடிக்கும்.

அடர்த்தி நிறைந்த விளக்கெண்ணெய் கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கிறது என்பதோடு இளநரை, வறண்ட கூந்தல் பிரச் னைகளையும் சரிசெய்கிறது. குளிர்ச்சி மிகுந்த உடல்நிலையைக் கொண்டிருப்பவர்கள் விளக்கெண்ணெயுடன் சற்று தேங் காய் எண்ணெயும் சேர்த்து கூந்தலில் தடவினால் பாதிப்பு இருக்காது.

வறண்ட சருமத்தைக் கொண்டிருப்பவர்கள் இரண்டு டீஸ்பூன் சுத்தமான எண்ணெயுடன் பாசிப்பருப்பு மாவு / குளியல் பொடி / மஞ்சள் தூள் ஏதேனும் ஒன்றை சேர்த்து முகத்தில் மசாஜ் போல் செய்ய வேண்டும். (முகத்துக்கு எந்த பேக் போடுவ தாக இருந்தாலும் கீழிருந்து மேல் நோக்கியவாறு மசாஜ் இருக்க வேண்டும். அப்போதுதான் சருமங்களில் சுருக்கங்கள் விழாது) அரை மணி நேரம் கழித்து முகத்தை மிதமான வெந்நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். சருமமும் வெண்மையாக இருக்கும்.

கண்ணுக்கு வேலைத்தரக்கூடிய பணிகளில் இருக்கும் இன்றைய தலை முறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்னை கண்க ளின் கீழ் இருக்கும் கருவளையம். இரவு படுக்க செல்வதற்கு முன்பு விளக்கெண்ணையை உள்ளங்கையில் ஊற்றி நன்றாக குழைத்து கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் போல் 10 நிமிடங்கள் செய்து வந்தால் ஒரே வாரத்தில் கண்கள் புத்துணர்வோடு இருக்கும். கருவளையம் இருந்த இடம் தெரியாது.

முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்து பொருளும் இயற்கையோடு தொடர்பு கொண்ட ஆரோக்கியமான அவசியமான பொருள்களே. விளக்கெண்ணெய் வியக்க வைக்கும் நல்குணங்களைக் கொண்டிருக்கிறது என்பதை இனியேனும் உணரு வோமா?