வடு மாங்காய் ஊறுகாய் வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

வடுமாங்காய் – அரை கிலோ
கடுகுப் பொடி – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 25 கிராம்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி அளவு
கல் உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை

பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி, துடைத்து ஈரமில்லாமல் செய்யவும். காம்பை நீக்கிவிட்டு இதை நல்லெண்ணெயில் புரட்டி

கடுகுப் பொடி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூளை பரவலாகப் போட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

3 நாட்களிலேயே மாங்காய் தோல் சுருங்கி ஊற ஆரம்பிக்கும். ஒரு வாரம் வரை டப்பாவை குலுக்கிவிடவும். அதில் உப்பு, காரம் இறங்கி சுவையாக இருக்கும்

Rates : 0