மெட்ராஸ் சாம்பார் வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு வேகவைத்தது – 1 கப்
நறுக்கிய முருங்கைக்காய் – 1
நறுக்கிய கத்தரிக்காய் – 4
நறுக்கிய சின்ன வெங்காயம் – 10
நறுக்கிய தக்காளி – 4
புளி – சிறிதளவு
சாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்
மல்லிதூள் ,மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
வெந்தயம், கடுகு, சீரகம் – தாளிக்க
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – சிறிது


செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், காய்கறிகள்,

சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் தக்காளி புளி தண்ணீிர் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மல்லிதூள் மிளகாய்தூள் போட்டு கொதிக்க விடவும் .

காய் ஓரளவு வெந்தவுடன் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அதில்

வேகவைத்த பருப்பு, தேவைாயன அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

பின் மற்றொரு கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, வெந்தயம், சீரகம் கருவேவப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி பரிமாறவும்.

சுவைாயன மெட்ராஸ் சாம்பார் ரெடி