புடலங்காய் பொரியல் வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

புடலங்காய் – 250 கிராம்
வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
வெங்காயம் – ஒன்று
சிவப்பு மிளகாய் – 3
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை

புடலங்காய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அதனுடன் புடலங்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும். புடலங்காயில் தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து வேக விடவும்.

காய் வெந்த பிறகு வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும். புடலங்காய் பொரியல் ரெடி