பாகற்காய் கேரட் பொரியல் வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

பாகற்காய்- கால் கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
கேரட் – 2
உப்பு – தேவையான அளவு
நல்லெ ண்ணெய்-5 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை- தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல்-கால் மூடி
காய்ந்த மிளகாய்-3
சீரகம்- அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம்-5
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்


செய்முறை

கேரட் பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும் அரைக்க கொடுத்தவற்றை தண்ணீர் சேர்க்காமல் கரகரவென அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்யை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் கேரட் பாகற்காயை தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

காய் கொஞ்சம் வதங்கியதும் அரைத்த மசாலாவைப் போட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து நன்கு வதக்கவும். சுவையான பாகற்காய் கேரட் பொரியல் ரெடி

கேரட் சேர்த்திருப்பதால் பாகற்காயின் கசப்பு தன்மை குறைந்து விடும்

மசாலா வாசனை போனவுடன் இறக்கவும்.