சென்னை காரகுழம்பு வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 3
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 15 பல்
தக்காளி – 2
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 4 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை

கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
பூண்டை உரித்து வைத்து கொள்ளவும்.

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சீரகம் தாளித்து வெங்காயம் பூண்டு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

பின் அதனுடன் கத்தரிக்காய் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்

கத்தரிக்காய் வதங்கியவுடன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி மசாலா வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி புளி கரைத்த தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்
சுவைாயன சென்னை காரகுழம்பு ரெடி