கத்திரிக்காய் கொத்சு வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 4
தனியா – 2 ஸ்பூன்
கடலைபருப்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
புளி எலுமிச்சை அளவு
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

தனியா கடலைபருப்பு காய்ந்த மிளகாய் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து பொடித்து கொள்ளவும்.

கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் புளியை கரைத்து ஊற்றி தேவைாயன அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கத்தரிக்காய் வெந்தவுடன் அரைத்த பொடியை போட்டு கிளரி இறக்கவும்.

சுவைாயன கத்தரிக்காய் கொத்சு ரெடி