கத்தரிக்காய் வற்றல் குழம்பு வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

நறுக்கிய சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 15 பல்
கத்தரிக்காய் வற்றல் – 10
புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
மல்லி தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்


செய்முறை

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்து கத்தரிக்காய் வற்றல் பூண்டு போட்டு வதக்கி, அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

பின் அதனுடன் அனைத்து தூள்களையும் சேர்த்து வதக்கி புளியை கரைத்து ஊற்றி , தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு கொதித்து எண்ணெய் மிதந்து வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவைாயன கத்தரிக்காய் வற்றல் குழம்பு ரெடி