கண்டந்திப்பிலி தக்காளி ரசம் வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

கண்டந்திப்பிலி – 1 ஸ்பூன்
தக்காளி – 2
வேக வைத்த பருப்பு – கால் கப்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு -தேவையான அளவு
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை

மிளகு சீரகத்தை பொடித்து மிக்சியில் கொள்ளவும்.

கண்டந்திப்பிலியையும் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் கரைத்த புளிதண்ணீர் தக்காளி சேர்த்து மசித்து வேகவிடவும்.

அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் பொடித்த கண்டந்திப்பிலிப் போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்

ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் கெட்டியாக இருக்கும்

ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

பின் சிறிய கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதை ரசத்தில் கலக்கி விடவும். இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார்