ஒரு நாளைக்கு இத்தன பச்சை மிளகாய் சாப்பிட்டா எடையை வேகமாகக் குறைக்கலாமாம்

பச்சை மிளகாயில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துக்களும் இருப்பது நமக்குத் தெரியும். அதோடு நம் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கும் பச்சை மிளகாய் பயன்படுகிறது. அதை தினசரி உணவில் எப்படி சேர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
​முக்கியமான சில விஷயங்கள்

வயிற்றுப் புண், தொண்டைப் புண், அல்சர் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அதிகம் பச்சைமிளகாயை எடுப்பது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நல்லது அல்லது மருத்துவரை அணுகி மேற்கண்ட பிரச்சனைகளைச் சரி செய்து பின்பு பச்சைமிளகாய் அல்லது பிற காரம் சார்ந்த உணவுகளை எடுத்தல் அவசியம். இவை அனைத்திற்கும் மேலாக அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக் கொண்டு எதையும் அளவுக்கு அதிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

​பச்சை மிளகாய்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்த உடனேயே பல வழிகளில் நாம் பல விஷயங்களைச் செய்து கொண்டிருப்போம் உடல் எடை குறைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். எடுத்தவுடன் அப்படி அதிக சிரமம் தரக்கூடிய உடல் எடை குறைக்கும் விஷயங்களைச் செய்வதைவிட எளிதாக ஆரம்பிப்பது நல்லது. அதுமட்டுமில்லாமல் எளிதாகப் பண்ணக்கூடிய ஒரு சில விஷயங்கள் பெரும் பலனைத் தரும். சொல்லப் போனால் உடல் எடையைக் குறைக்கக்கூடிய சில மருந்துகளை விட நாம் செய்யும் ஒரு சில சாதாரண விஷயங்கள் மிகப் பெரிய பலனைத் தரும் அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான் பச்சை மிளகாய்.

​காரமான உணவுகள்

நீங்கள் கார உணவு விரும்பியாக இருந்தால் நிச்சயம் இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவே அமையும். சிலர் தான் உண்ணும் பொருள்கள் அனைத்திலும் அதிக காரம் சேர்த்துச் சாப்பிடும் வழக்கம் உடையவர்களாக இருப்பார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு இப்பொழுது நான் சொல்லப் போகும் விஷயம் மிகவும் நல்ல ஒரு செய்தியாக இருக்கும்.

பொதுவாகவே இந்திய உணவு பழக்க வழக்கங்களில் காரம் அதிகமாகவே உபயோக செய்கின்றோம். குழம்பு, கறி, பொரியல், கூட்டு என்ற அனைத்து விஷயங்களிலும் பச்சை மிளகாய் சேர்ப்பதையே நாம் வழக்கமாக வைத்துள்ளோம்.

​ஊட்டச்சத்துக்கள்

நாம் அப்படி விரும்பி சுவைத்து உண்ணும் பச்சை மிளகாயின் நற்குணங்கள் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால் காரசாரமாக உணவு, சாப்பிடுபவர்களை விடக் காரமில்லாத உணவு பழக்கவழக்கங்கள் அதிகம் கொண்டுள்ளார்கள் எடை அதிகம் காணப்படுவது வழக்கம். காரணம் பச்சை மிளகாயில் உள்ள உடல் எடை குறைக்கக் கூடிய சில காரணிகள். பச்சை மிளகாயில் உயிர்ச்சத்து சி அதிகமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே அதேபோல அண்டிஆக்சிடன்ட்ஸ், நார்ச்சத்து அதோடு சேர்த்து விட்டமின் ஏ பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது. பச்சை மிளகாய் எப்படி உடல் எடை குறைக்கப் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

​மெட்டபாலிசத்தை அதிகரிக்க

நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தோர்களானால் பச்சைமிளகாய் உங்கள் சாப்பாட்டில் சேர்ப்பது அவசியம் ஏனென்றால் பச்சை மிளகாயில் மெட்டபாலிசம் அதிகமாக இருக்கிறது.மெட்டபாலிசம் கொழுப்புச்சத்தை வேகமாகக் குறைக்க உதவுகிறது. பச்சைமிளகாய் போன்ற காரமான உணவுகளைச் சாப்பிட்டால் மூன்று மணி நேரம் வரைக்கும் உங்களது மெட்டபாலிசம் அளவு அதிகமாக இருந்து உங்கள் கொழுப்புச்சத்தைக் குறைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கும்.

​திருப்தியைத் தருகிறது

மேலும் நாம் சாப்பிடும் உணவில், பச்சை மிளகாய் போன்ற காரம் அதிகம் சேர்த்துச் சாப்பிடும்பொழுது நமக்குச் சாப்பாடு முழு திருப்தி தருகிறது. அதனால் அதிகமாகச் சாப்பிடுவதை நாம் தவிர்த்து விடுவோம். வயிறு நிறைந்தது போன்ற ஒரு உணர்வு தருவதால் மேலும் உண்ணுபதையும் குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

​உடல் எடையைக் குறைக்க

அமெரிக்காவைச் சேர்ந்த ஜர்னல் கிளினிக்கல் நியூட்ரிஷன் 2008 ஆம் ஆண்டில் வெளியான பதிப்பில் பச்சை மிளகாய் அல்லது குடைமிளகாயில் உள்ள சில காரணிகள் உடல் எடையைக் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கப் பெரிதும் உதவி செய்கிறது என்று கூறியுள்ளார்கள்.

​தினசரி உணவில் பச்சை மிளகாயைச் சேர்ப்பது எப்படி?

பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. சொல்லப்போனால் நாம் ஆம்லெட் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் அதில் பொடித்தாக நறுக்கிய பச்சைமிளகாய் தூவி விடவேண்டும். அதேபோல் குழம்பு பொரியல் கூட்டு அனைத்திலும் முடிந்தவரைப் பச்சைமிளகாயை அதிகம் சேர்த்து வந்தால் நிச்சயம் பலன் தரும். சிலர் பச்சை மிளகாயை அப்படியே சாப்பிடவும் செய்வார்கள் ஆனால் அது அனைவராலும் செய்வது கடினம் எனவே நாம் தினமும் உணவில் முடிந்த வரை பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டால் உணவிற்குக் கூடுதல் ருசி மட்டுமல்லாமல் நம் உடல் எடையைக் குறைக்க அது பெரிதும் உதவி செய்கிறது.