எளிதாக கிடைக்கும் எள்ளை உணவில் சேர்ப்பதால் இத்தனை பயன்களா

எளிதாக கிடைக்கும் எள்ளை உணவில் சேர்ப்பதால் இத்தனை பயன்களா

ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.

எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.

எள் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.

எள்ளில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. மேலும் பல விதமான புற்று நோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது.

எள் கொண்டிருக்கும் இயற்கை சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.