ஆலு மட்டர் மசாலா வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – கால் கிலோ
பச்சைப் பட்டாணி – 150 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கறிமசால் தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 4 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை

பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

உருளை கிழங்கையும் வேக வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் , நெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

வதங்கியவுடன் பட்டாணி சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிமசால் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி, வேக வைத்த உருளைக் கிழங்கை துண்டுகளாக நறுக்கி அதனுடன் தேவைாயன அளவு உப்பு சேர்த்து மூடிபோட்டுக் 10 நிமிடம் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து கெட்டியானவுடக் இறக்கி, , கொத்தமல்லி தூவவும். சுவையான ஆலு மட்டர் மசாலா ரெடி

Rates : 0