வெஜிடபிள் பன்னீர் குருமா வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

பன்னீர் – 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 2
நறுக்கிய கேரட் – 1
பச்சை பட்டாணி – சிறிதளவு
நறுக்கிய பீன்ஸ் – 4
நறுக்கிய உருளை கிழந்கு – 1
நறுக்கிய தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மல்லி இலை – சிறிதளவு
கிராம்பு – 2
பட்டை – 1
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கிராம்பு – 2
பட்டை – 1

அரைக்க தேவைாயனவை

தேங்காய் – கால் மூடி
பச்சை மிளகாய் – 3
சோம்பு – அரை ஸ்பூன்
கசாகசா – அரை ஸ்பூன்


செய்முறை:

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பன்னீரை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். இப்போது அதே கடாயில் தேங்காய் சேர்த்து வதக்கி அத்துடன் பச்சை மிளகாய்,கசாகசா, சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை, போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி அதனுடன் காய்கறிகளையும் சேர்த்து வதக்கி தேவைாயன அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கி
அதனுடன் அரைத்த மசாலா கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைத்து அதில் பன்னீரை போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான வெஜிடபிள் பன்னீர் குருமா ரெடி
சப்பாத்தி தோசை இட்லிக்கு சூப்பராக இருக்கும்