வரகு அரிசி பிரியாணி வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

வரகு அரிசி – 4 டம்ளர்
பட்டை – 2
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
நல்ல எண்ணெய் -150 கிராம்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் -அரை ஸ்பூன்
பச்சைப்பட்டாணி – 100 கிராம்
வெங்காயம் – 3 நறுக்கியது
தக்காளி – 3 நறுக்கியது
புதினா – 1 கட்டு
மல்லித்தழை – 1 கட்டு
நெய் – 50 கிராம்
கேரட் – 2
பீன்ஸ் – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 2
தயிர் – 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 8 ஸ்பூன்


செய்முறை:

அடுப்பில் குக்கரில் வரகு அரிசியை வறுத்து வைக்கவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், புதினா, கொத்தமல்லித் தழை, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் 7 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வரகு அரிசியை சேர்த்து கிளறி தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி 1 கொதி வந்ததும் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். இறக்கி சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.