ருசியான ஐயங்கார் புளியோதரை செய்யும் முறை

ருசியான ஐயங்கார் புளியோதரை செய்யும் முறை


தேவையான பொருட்கள்

புளி – சிறிய உருண்டை மல்லி – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
எள்ளு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் -சிறிதளவு கடுகு – சிறிதளவு
உளுந்து 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை -சிறிதளவு
மணிலா – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு


செய்முறை

முதலில் ஒரு உருண்டை புளியை எடுத்து அதனை ஊறவைக்கவும் . பிறகு ஒரு கடாயில் கடலை பருப்பு, மல்லி, எள்ளு, வெந்தயம், மிளகு மற்றும் காய்ந்தமிளகாய் போட்டு வறுத்து எடுத்து அதனை மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் .

பிறகு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடு , கடைப்பருப்பு, மற்றும் உளுந்து போட்டு வறுத்த மணிலாவை அதில் சேர்க்கவும். பிறகு, கூடவே அதனுடன் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை பாதி கடாயில் போட்டு வதக்கவும்.

பிறகு நாம் ஏற்கனவே ஊறவைத்த புளிக்கரைசலை இதனுடன் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும் போது அதில் ஆறவைத்த சாதத்தினை சேர்த்து கிளறவேண்டும். கிளறிய பிறகு அரைத்து வைத்துள்ள மீதி பொடியை தூவி மீண்டும் நன்றாக கிளறி எடுத்தால் சுவையான ஐயங்கார் புளியோதரை தயார்.