பூண்டு பொடி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

பூண்டு பொடி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

நாட்டுப் பூண்டு – சுமார் 50 பல் (தோல் நீக்கவும்),
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் கப்,
காய்ந்த மிளகாய் – 15,
பெருங்காயம் – சிறு துண்டு,
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு,
கறிவேப்பிலை – 4 ஆர்க்கு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும். பிறகு, காய்ந்த மிளகாயை வறுத்தெடுக்கவும். பின்னர் பருப்பு வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். வாணலியில் பூண்டு சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும். மீதமுள்ள எண்ணெயில் புளியை சற்று மொறுமொறுப்பாக பொரித்தெடுத்துவிட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுக் கவும்.
வறுக்கப்பட்ட அனைத் துப் பொருட்களும் ஆறிய தும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு கலந்து நைஸாக அரைக்கவும்.