பிக்பாஸ் மீரா மிதுன் செய்த செயல் போலிஸ் கடும் நடவடிக்கை? வீடியோ இதோ

பிக்பாஸ் மீரா மிதுன் செய்த செயல் போலிஸ் கடும் நடவடிக்கை? வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன். நிகழ்ச்சிக்கு முன் அவர் மீது சில சர்ச்சைகளும் எழுந்தன.

மேலும் அவர் அண்மையில் அடுத்தடுத்து சில படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அண்மையில் சென்னை எழும்பூரில் ஹோட்டல் ஒன்றில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார்.

இதில் அவர் தமிழக அரசையும், காவல் துறையும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு என் மீது போலியான புகார்கள் பதிவுசெய்கின்றனர்.

தமிழ்நாட்டில் நீதி கிடைக்கவில்லை, மத்திய இடம் வரை பிரச்சனையை எடுத்துச்சென்றால் அது தமிழ்நாட்டிற்கு தான் அசிங்கம் என கூறியுள்ளார்.

இதனால் ஹோட்டல் நிர்வாகம் அவரை சர்ச்சையான விவாதங்களை உண்டாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் அவர் அவர்களிடம் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் ஹோட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் அவர் மீது சென்னை எக்மோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மீரா மிதுன் இதை மறுத்து தற்போது மறுத்துள்ளார்.