பருவ மாற்றத்தினால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரிசெய்ய எளிய வழிகள்

பருவ மாற்றத்தினால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரிசெய்ய எளிய வழிகள்

பருவ மாற்றத்தின் போது சரும பராமரிப்பு மிகவும் முக்கியமானது. காற்றில் ஈரப்பதம் குறையும்போது சரும பாதிப்புகள் ஏற்படும் வயது முதிர்ச்சி, உடல் ஆரோக்கியம் பொருத்து சரும பாதிப்பு மாறுபடும்.

சருமத்தை சரிசெய்ய தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம். இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுவதுடன் சருமத்தை மென்மையானதாக மாற்றும்.

ஓட்ஸ் சருமத்தை மென்மையாக வைத்திருப்பதுடன் சிறந்த மாய்சுரைசராக பயன்படுகிறது. இதனை அரைத்து பொடியாக்கி பாலுடன் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பின் கழுவி வந்தால் சருமத்தில் வறட்சி நீங்கும்.

பாலில் லேக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் இருக்கும் வறட்சியை போக்கும். பாலை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வரலாம்.

தயிர் சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்கும். சருமத்தில் தயிரை தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரலாம். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேனில் வைட்டமின், ஆண்டி-ஆக்ஸிடண்ட், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது. தேனை முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி வரலாம்.