பருப்பு குழம்பு வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – அரை கப்
தக்காளி-1
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
தேங்கா எண்ணெய் -1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு

அரைக்க.

தேங்காய் – அரை கப்
பச்சை மிளகாய் -2
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4


செய்முறை:

முதலில் மசாலாவை தயாரிக்க தேங்காய் பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சின்ன வெங்காயம் சேர்த்து மிக்சியல் அரைத்து கொள்ளவும்.

குக்கரில் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பூண்டு, தக்காளி சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி 2 விசில் வரை வேக விடவும். வெந்த பின் அதை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள மசாலாவை பருப்பில் சேர்த்து கலக்கவும். உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அதனுடன் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து பருப்பில் ஊற்றவும். நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலை நிறைய சேர்த்து இறக்கவும்.