பச்சை மொச்சை மசாலா வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

பச்சை மொச்சை – 1 கப்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
சீரகம் – 1 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

மொச்சையை தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு 3 விசில் விட்டு வேக விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வேக வைத்த மொச்சையை மசாலாவோடு சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கவும்.

சுவைாயன பச்சை மொச்சை மசாலா ரெடி

Rates : 0