தொப்பை சட்னி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

தொப்பை சட்னி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

சிவப்பு பூசணி (தோல் மற்றும் விதையுடன் கூடிய சதைப் பகுதி), வாழைக்காய் தோல், பிஞ்சு புடலங்காய் உள்ளே உள்ள விதைப் பகுதி, பீர்க்கங்காய் தோலுடன் கூடிய சதைப் பகுதி, சேனைக்கிழங்கின் தோல் நீக்கி லேசாக நறுக்கிய சதைப் பகுதி (எல்லாம் சேர்த்து) – ஒரு கப்,
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4 (அல்லது தேவைக்கேற்ப),
புளி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். காய்களின் தோல், சதைப் பகுதிகளை நன்றாக கழுவி நீரை வடித்து வைக்கவும். கடாயில் ஒரு குழி கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் காய்களை சேர்த்து சிவக்க வதக்கவும்.

மிக்ஸியில் உப்பு, புளி, கறிவேப்பிலை மற்றும் வறுத்த பொருட்கள் சேர்த்து அரைக்கவும். பிறகு, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கிய காய்கள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதம், குழம்பு சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.