சோள வடாம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

சோள வடாம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

தோல் நீக்கிய வெள்ளை சோளம் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 3,
ஒன்றிரண்டாக பொடித்த மிளகு – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

சோளத்தைக் கழுவி, 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து… பின்னர் நீரை வடித்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நீர் விட்டு நைஸசாக அரைக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து, பொடித்த மிளகு சேர்க்கவும். இந்த மாவை 3 மணி நேரம் புளிக்கவிடவும்.

மாவை கரண்டியில் எடுத்து வடாம் ஸ்டாண்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்க… 2 நிமிடத்தில் வெந்துவிடும். இதனை உரித்து எடுத்து உடனே சாப்பிடலாம். நிழலில் உலர்த்தி எண்ணெயில் பொரிக்கலாம். உடனே சாப்பிடும்போது இட்லி மிளகாய்ப்பொடியில் நல்லெண்ணெய் கலக்கி தொட்டு சாப்பிடலாம்.

வடாம் ஸ்டாண்ட் கிடைக்கவில்லை என்றால், வாழை இலை, புரச இலையைப் பயன்படுத்தி ஆவியில் வேக வைக்கலாம்.