சிறு கிழங்கு மிளகு வறுவல் வீட்டிலேயே செய்முறை


தேவையான பொருட்கள்

சிறு கிழங்கு – அரை கிலோ
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 2


செய்முறை:

முதலில் சிறு கிழங்கை நன்கு கழுவி குக்கரில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்.

பின்பு ஆற வைத்து தோலை உரித்து 2 துண்டாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் சிறு கிழங்கை உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

கிழங்கானது லேசாக மொறுமொறுவென்று வரும் போது, அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி இறக்க வேண்டும். சுவைாயன சிறு கிழங்கு மிளகு ப்ரை ரெடி