கார தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

கார தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

இட்லி புழுங்கல் அரிசி – ஒரு கப்,
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
தனியா – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
கறிவேப்பிலை – தேவையான அளவு,
நறுக்கிய சாம்பார் வெங்காயம் – கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தேவையான நீர் விட்டு ரவை பதத்துக்கு அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

மாவை 2 மணி நேரம் புளிக்க வைக்க வும். பிறகு, மாவை தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்.

இதற்கு தொட்டு கொள்ள… கத்திரிக்காய் சட்னி ஏற்றது. கத்திரிக் காயை சுட்டு, தோலுரிக்கவும். மிக்ஸி யில் பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புளி, சாம்பார் வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து… கத்திரிக்காயை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.