கணவரை விவாகரத்து செய்ததும் குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பிக்பாஸ் பிரபலம் நடிகர் உதவுவாரா

கணவரை விவாகரத்து செய்ததும் குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பிக்பாஸ் பிரபலம் நடிகர் உதவுவாரா

பிக்பாஸ் என்ற ஒரு நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களையும் கவனிக்க வைத்தது. முதல் சீசனிற்கு இருந்த மக்களின் ஆர்வம் அடுத்தடுத்த 2,3 சீசன்களுக்கு இருந்ததா என்றால் சந்தேகம் தான்.

ஆனாலும் அடுத்த 4வது சீசனை எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் உள்ளார்கள். முதல் சீசனில் பாதியில் வந்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி.

இவர் நடன இயக்குனர் சாண்டியை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றவர்.

தற்போது இவர் தனக்கு குழந்தையை தத்தெடுக்க ஆசையாக இருப்பதாகவும் குழந்தையின் செலவை தானே பார்த்துக் கொள்வதாகவும், அதற்கான உதவியை நீங்கள் செய்ய வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ளார் காஜல் பசுபதி.