ஸ்பைஸி பப்பட் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

ஸ்பைஸி பப்பட் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

மிளகு – சீரக அப்பளம் – 4 (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்)
நெய் – அரை டீஸ்பூன்.
காராபூந்தி – 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம், வெள்ளரி, கேரட் – தலா ஒன்று (நறுக்கவும்),
எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு – சிறிதளவு.


செய்முறை:

மிளகு – சீரக அப்பளத்தை சுட்டு மேலே நெய் தடவும். அதன் மேல் நறுக்கிய காய்கள், காராபூந்தி, மிளகாய்த்தூள், உப்பு தூவவும். எலுமிச்சைச் சாறு சில துளிகள் சேர்த்து அப்பளம் நமர்த்துப் போகும் முன் பரிமாறவும்.