வீரம் படப்பிடிப்பில் அஜித்தை பற்றி அப்படி ஒரு விஷயம் தெரிந்தது மனம் திறந்து கூறிய இயக்குனர் சிவா

வீரம் படப்பிடிப்பில் அஜித்தை பற்றி அப்படி ஒரு விஷயம் தெரிந்தது மனம் திறந்து கூறிய இயக்குனர் சிவா

இயக்குனர் சிவா, தலயை வைத்து 4 ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். அதிலும் கடைசி படமான விஸ்வாசம் மாஸ் மெகா ஹிட் என்றே கூறலாம்.

அடுத்து இவர்கள் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு பெரிய கேள்வி உள்ளது, அதற்கும் சிவா வேறொரு படம் முடித்துவிட்டு மீண்டும் இணைவோம் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சினிமாவை தாண்டி தீவிர பாபா பக்தரான இவர் ஆன்மிகம் குறித்து சிவா பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, அஜித் அவர்கள் கூட பாபா பக்தர். வீரம் படப்பிடிப்பு நடக்கும் போது தான் அஜித் அவர்களே ஷேர் செய்தார்.

நானும் என்னுடைய பக்தியை பற்றி அவரிடம் கூறினேன், அந்த தருணம் நன்றாக இருந்தது என்றார்.

Rates : 0