பூண்டு ஊறுகாய் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

பூண்டு ஊறுகாய் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

பூண்டு – ஒரு கப் (உரித்தது),
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
புளி – எலுமிச்சை பழ அளவு,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு, தனியா, வெந்தயம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

தனியா, வெந்தயம், சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து சிவக்க வதக்கி… புளிக் கரைசலை ஊற்றவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு, செய்து வைத்திருக்கும் பொடியைத் தூவவும். நன்றாக சுண்டி, எல்லாம் ஒன்றாக கலந்து வந்தவுடன் இறக்கி ஆறவிட்டு, காற்றுப்புகாத பாட்டிலில் போட்டுவைக்கவும்.

Rates : 0