நடிகரான கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் டாப் தமிழ் ஹீரோ படத்தில் ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் சீயான்58 படத்தில் பதான் முக்கிய ரோலில் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர்.
சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான் இர்பான் பத்தான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார்.
இதை ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.