தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் இந்த நீரை குடிங்க

தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் இந்த நீரை குடிங்க

தற்போது நிறைய பேர் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகின்றனர்.

இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் தொடருவதுதான் தூக்கமின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணாமாக அமைகின்றது.

தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சோர்வு போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

தூக்கமின்மையால் கஷ்டப்படுபவர்களது உடலில் ஒரு நாளைக்கு வேண்டிய போதிய ஆற்றல் கிடைக்காமல் இருப்பதால், அவர்களால் நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது.

அந்தவகையில் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட வாழைப்பழம் பெரிதும் உதவி புரிகின்றது.

வாழைப்பழம் மற்றும் அதன் தோலில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைய இருக்கின்றன. இதிலுள்ள மெக்னீசியம் உறக்கம் சார்ந்த தொல்லைகளை சீராக்க உதவுகின்றது.

தற்போது வாழைப்பழத்தினை வைத்து தூக்கமின்மை பிரச்சினைக்கு எப்படி தீர்வு காணுவது என்று பாரப்போம்.

தேவையானவை
வாழைப்பழம் ஒன்று
ஒரு கிளாஸ் நீர்
இலவங்கப் பட்டை
தயாரிக்கும் முறை
வாழைப்பழத்தின் இரு முனைகளையும் வெட்டிவிடுங்கள்.

பிறகு வாழைப்பழத்தை நீரில் வேக வையுங்கள். குறைந்தது 10 நிமிடங்களாவது வாழைப்பழம் நீரில் வேக வேண்டும்.

பிறகு தேவை என்றால் பொடித்த இலவங்கப் பட்டையை தூவவும்.

தினமும் இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த வாழைப்பழம் வேக வைத்த நீரை குடித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவாக வெளிவரலாம்.