ஸ்வீட் பச்சைப் பயறு தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

ஸ்வீட் பச்சைப் பயறு தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

பச்சைப் பயறு – 1 கப்,
பொடித்த வெல்லத்தூள் – கால் கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
நெய் – 1 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை,
சுக்குத்தூள் – 2 சிட்டிகை.


செய்முறை:

பச்சைப் பயறை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை மிதமான தீயில் வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். ஊறிய பச்சைப் பயறை குக்கரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். வெந்த பச்சைப் பயறை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, வெந்த பச்சைப் பயறு, வெல்லக்கரைசலைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியாக வந்ததும் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

பலன்கள்: பச்சைப்பயறு கொழுப்பைக் குறைக்கும். ரத்தச்சோகையைச் சரிசெய்யும். சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் வெல்லம், இரும்புச்சத்து நிறைந்தது. சுக்கு, அலுப்பை நீக்கிப் புத்துணர்வு பெற உதவும்.