ராகி ஸ்வீட் சேமியா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

ராகி ஸ்வீட் சேமியா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

ராகி சேமியா – 1 கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
நாட்டுச் சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
முந்திரி – 10, நெய் – 2 டீஸ்பூன்.


செய்முறை:

முந்திரிப்பருப்பை சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். ராகி சேமியாவுடன் அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து வடித்துவிடவும். பின்னர் அதை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வெந்த ராகி சேமியா சூடாக இருக்கும்போது மீதமுள்ள நெய், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நாட்டுச் சர்க்கரை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்: ராகி, எலும்புகளை பலமாக்கும். பற்கள் வலுவாகும். உடலில் உள்ள தேவையற்ற சதையைக் குறைக்க உதவும். நாட்டுச் சர்க்கரை அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்தது. ஏலக்காய், செரிமானத்துக்கு உதவும். முந்திரியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுவடையச்செய்வதோடு புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கும்.