சங்குப்பூ டீ தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

சங்குப்பூ டீ தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

வயலட் கலர் சங்குப்பூ – 5,
தண்ணீர் – 200 மி.லி.,
தேன் – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – கால் டீஸ்பூன்.


செய்முறை:

சங்குப்பூவை அலசி வைத்துக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கவும். கொதித்த நீரில் சங்குப்பூவை போட்டு 10 நிமிடம் வாணலியை மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்துத் திறந்து பார்த்தால் பூவில் உள்ள எசென்ஸ் நீரில் கலந்திருக்கும். பிறகு அந்த நீரை வடிகட்டி டம்ளரில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.

பலன்கள்:

சங்குப்பூ ரத்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்யும். குடற்புழுக்களைக் கொல்லும்; செரிமானத்துக்கு உதவும். தலைவலியைச் சரிசெய்யும். சோர்வைப் போக்கிப் புத்துணர்வு பெற உதவும்.

Rates : 0